Dallas-ல் மணி இப்போது 12:09 நடு இரவு. வீட்டில் New Jersey-யில் 1:11
AM. அலுவல் விஷயமாக ஒரு வாரம் Texas-ல் உள்ள Dallas என்ற இடத்திற்கு
வந்திருக்கிறேன். இன்றோடு மூன்று நாள் ஆகிறது. இன்னும் மூன்று
நாள் செல்லும் வீட்டில் போய் சேர...
பொதுவாக
அமெரிக்காவில் Texas மக்களை குறித்து நல்ல பெயர் உண்டு - விருந்தோம்பலில்
சிறந்தவர்கள் என்று. அது உண்மை தான். Airport-ல் இருந்து வெளியில்
வந்தவுடனே taxi-க்காக line-ல் நிற்கும்போது குடிக்க தண்ணீர் வேண்டுமா என்று
கேட்டு குளிர்ந்த ஒரு பாட்டில் தண்ணீர் கையில் கொண்டு தருவார்கள். வேறு
எந்த இடத்திலும் இப்படி ஒரு உபசரிப்பை நான் பார்த்தது கிடையாது.
மக்களும்
கூட New York போல ஆடம்பரம் இல்லை. முடி, நகம், முகம், பல், உதடு எல்லாம்
உள்ளது உள்ளது போல் தான் வைத்திருக்கிறார்கள். வெள்ளை முடி என்றால் வெள்ளை
முடி. உடைந்த பல் என்றால் உடைந்த பல். ஒடிந்த நகம் என்றால் ஒடிந்த நகம்.
இப்படி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் காணப்படுகிறார்கள். அதனால் தானோ என்னவோ
New York மக்களை விட கொஞ்சம் வயதில் கூடினவர்களாக தெரிகிறார்கள்.
நான்
ஒரு Conference-க்காக வந்திருக்கிறேன். Germany, France, Canada, மற்றும்
அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள்
வந்திருக்கிறார்கள்.
நன்றாகத்தான் இருக்கிறது மாநாடு. இருந்தாலும்
பிள்ளைகளை விட்டுவிட்டு இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று
அடிக்கடி தோன்றத்தான் செய்கிறது.
நான் மட்டும் இல்லை. வந்திருக்கிற எல்லா அம்மாக்களும் இதைத்தான் பேசிக்கொள்கிறோம் சமயம் கிடைக்கும் போதெல்லாம்.
நான் மட்டும் இல்லை. வந்திருக்கிற எல்லா அம்மாக்களும் இதைத்தான் பேசிக்கொள்கிறோம் சமயம் கிடைக்கும் போதெல்லாம்.
அப்பாக்கள் ஏனோ வீட்டைப் பற்றி ஒரு
கவலையையும் காட்டிக்கொள்வது இல்லை. அவர்கள் இல்லாவிட்டாலும் எல்லாம் தானாய்
நடக்கும் என்பது போலத்தான் இருக்கிறார்கள். வேலை ஒன்றே அவர்கள்
வாழ்க்கை போலும்.
பாவம் தான் அம்மாக்கள். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று. வீடும்
வேண்டும் வேலையும் வேண்டும் என்று. குடும்பமும் வேண்டும் பதவியும்
வேண்டும் என்று. அங்கேயும் இங்கேயுமாக...
ஆனாலும்
கூட எவ்வளவு சந்தோஷமாய் சிரித்த முகத்துடன் conference-ன் ஒவ்வொரு
காரியங்களிலும் பெண்கள் முன் நிற்பதையும், புதிய பாடங்களை புரிந்து
கொள்வதில் ஆர்வம் காட்டுவதையும், நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட
பார்வையையுமாய் உலாவுவதையும் பார்க்கும்போது ஒரு புதிய உற்சாகம் தானாய்
தோன்றத்தான் செய்கிறது.
எதையும் சாதித்துவிடலாம் என்ற துணிச்சல் எழும்பத்தான் செய்கிறது. ஒரு முறையேனும் ஏணியின் உச்சி வரை சென்றே தீர்வதென்று மனம் ஏங்கத்தான் செய்கிறது. எல்லைகளை விரிவாக்கியே ஆவது என்ற ஆசை நிறையத்தான் செய்கிறது.
எதையும் சாதித்துவிடலாம் என்ற துணிச்சல் எழும்பத்தான் செய்கிறது. ஒரு முறையேனும் ஏணியின் உச்சி வரை சென்றே தீர்வதென்று மனம் ஏங்கத்தான் செய்கிறது. எல்லைகளை விரிவாக்கியே ஆவது என்ற ஆசை நிறையத்தான் செய்கிறது.
எல்லாம்
பொறுங்கள் இந்த இரண்டு மூன்று நாட்களுக்குத்தான். விரிந்த சிறகுகளை
சுருட்டத்தான் வேண்டி வரும் வெகு விரைவில். ஏணியில் எடுத்து வைத்த அடிகளை
மீட்கத்தான் வேண்டும் சிறு பொழுதில். ஆற்றின் கால் கொஞ்சம் இழுக்கத்தான் போகிறது நொடியில்.
போகட்டும் விடுங்கள். கனவுகள் எல்லாம் கலையத்தானே?!
வீடு ஒன்றே எங்கள் வாழ்க்கை. நான் என்றில்லை, எல்லா அம்மாக்களும் இதைத்தான் சொல்லுவார்கள், கேட்டுப்பாருங்கள்...
Dallas-ல் நேரம் அதிகாலை ஒரு மணி பன்னிரெண்டு நிமிடம். வீட்டில் New Jersey-ல் இரண்டு மணி பதின்மூன்று நிமிடம்.
வீடு ஒன்றே எங்கள் வாழ்க்கை. நான் என்றில்லை, எல்லா அம்மாக்களும் இதைத்தான் சொல்லுவார்கள், கேட்டுப்பாருங்கள்...
Dallas-ல் நேரம் அதிகாலை ஒரு மணி பன்னிரெண்டு நிமிடம். வீட்டில் New Jersey-ல் இரண்டு மணி பதின்மூன்று நிமிடம்.
கொஞ்சம் உங்களோடு பகிர்ந்ததில் சந்தோஷம்...
விரைவில் மீண்டும் உங்களோடு,
~NRIGirl
விரைவில் மீண்டும் உங்களோடு,
~NRIGirl
6 comments: (+add yours?)
வணக்கம்
நாங்களும் நடை முறை பற்றி அறிந்தோம் தங்களின் பதிவு வழி பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் என்ற வரியை படித்தவுடன் ஒரு பெருமிதம் தோன்றத்தான் செய்தது.உச்சாணி கொம்பில் பெண்கள் நிறைய அளவில் இருக்கத்தான் போகிறார்கள்.வீட்டையும் வேலையையும் ஒருங்கே சமாளித்து முன்னேற செல்வதில் ஆர்வமும் திறமையும் அவர்களிடம் உள்ளது.
இப்போதெல்லாம் கணவர்கள் ஒத்துழைப்பதில் சற்று முன்னேற்றம் காணப்படுகிறது.
ஹிஹி…. அதாவது…. ஹிஹி…. அதுல பாருங்க…. அது என்னான்னா…. அஹ்ஹ்…. ம்க்கூகூம்…. ஆங்! இந்த அப்பாக்களுக்கெல்லாம் பேராச்சரியம்…. பெரும் அதிர்ச்சி…. எப்படி இந்த அம்மாக்களால் மட்டும் வேலையையும் பார்த்துகிட்டு, குடும்பத்தையும் சிறப்பா பாத்துக்க முடியுதுன்னு….
அது என்னான்னா…. என்னதான் முயற்சி செஞ்சும்…. இந்த அம்மாக்கள் மாதிரி அப்பாக்களால சிறக்க முடியறதில்ல….. அதுவும், ஆங்…..! இந்த அம்மாக்கள் மாதிரி சிறப்பா பாத்துக்க முடியலயேங்கற தாழ்வு மனப்பாண்மை வேற மனசுல பெரிய சுமையா கனக்குது!
அதுனாலதான்…. ஹிஹி… செய்ய முடிஞ்சத செறப்பா செஞ்சுடலாம்னு இப்படி வேலய மட்டும் கட்டிக்கிட்டு அழறாங்க…. எல்லாம் அம்மாக்கள் மேல உள்ள அதீத நம்பிக்கைதான்….! ஹி…ஹிஹி!
என்னது? அசரீரி கேக்குதா? “களவாணி பயலுகளா….. எப்படியெல்லாம் சமாளிக்கறீங்க…..?!!” அப்படீங்குதா?
இல்லையே….. எங்களுக்கு கேக்கலயே…. கேக்கவே இல்லையே!
நன்றி நண்பர் ரூபன்! தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி.
KP! நீங்கள் சொல்வதை பார்த்தால் கனவுகளை கலைக்கத் தேவையில்லை போலும். முயற்சிக்கிறேன்...
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.
நன்றி நண்பர் Bawa!
(கேட்குது கேட்குது அசரீரி, 'களவாணி பயலுகளா' என்பது தவிர்த்து. :) )
பேசியே சமாளிக்கிறீர்கள் அப்பாக்கள். அந்த பேச்சில் மயங்கியே அம்மாக்கள்... :))
கருத்துரையிடுக