நாற்பத்தி...

வயது நாற்பதை தாண்டி வீர நடை போட்டுக்கொன்டிருக்கிறது. எங்கே எப்போது எப்படி நாற்பதை தொட்டோம் என்று வியப்பாக இருந்தாலும், அட பரவாயில்லையே நாற்பது சுலபாக இருக்கிறதே என்று பூரிக்கிறது மனது. 

இருக்காதா பின்னே?!

ஒன்பதாம் வகுப்பில் ஆரம்பித்த ஓட்டம் பதட்டம் எல்லாம், கல்லூரியிலும், தொடர்ந்து வேலை வாய்ப்பு தேடுவதிலும், பிறகு கிடைத்த வேலையை தக்க வைத்துக்கொள்வதிலுமாக ஒரு முடிவேயில்லாமல் அல்லவா போய்க்கொன்டிருந்தது!

இப்போது நாற்பதை தொட்டு விட்டு திரும்பி பார்த்தால் அந்த ஓட்டமும் பதட்டமும் நின்று விட்டிருக்கிறது. "சரி பரவாயில்லை, என்ன தான் ஆகி விடப்போகிறது?", என்கிற மப்பை விட "இம்மட்டும் வழி நடத்தின கர்த்தர் இன்னும் நடத்துவார்", என்கிற நம்பிக்கை ஓங்கி நிற்கிறது.

கணவரையும் பிள்ளைகளையும் கொஞ்சம் வளர்த்து விட்ட நிலையில் (என்ன அப்படி பார்க்கிறீர்கள்! வேண்டியதை எடுத்து சாப்பிட வைப்பது வளர்த்து விடுவது தானே?) கொஞ்சம் மூச்சு விட நேரம் கிடைக்கிறது. என்னைப்பற்றி யோசிக்க, எனக்கு பிடித்ததை செய்ய -  என்ன படம் வரையலாம், என்ன கதை எழுதலாம், எந்த அ
றையை எப்படி மாற்றி அமைக்கலாம், என்று.

அழுக்காய் கிடக்கும் அ
றைகளை ஒரு தோல்வியாக எண்ணி மனம் ஒடிந்த நாட்கள் மாறி, வீடு கிடப்பது போல கிடக்கட்டும் என்று ஆறுதல் கொன்ட வகையில் கொஞ்சம் தூங்கி முழிக்க, நெட்டி முறிக்க நேரம் இருக்கத்தான் செய்கிறது விடுமுறைகளில்.

கடிதமாவது, கட்டுரையாவது, யார் வாசிக்கிறார்கள், யார் பதில் எழுதுகிறார்கள் என்ற அங்கலாய்ப்பினால் தானோ என்னவோ கொஞ்சம் உங்களோடு பகிர்வதிலும் வேகம் குறைந்திருக்கிறது.

தின் பண்டங்கள் மீதான ஆசை குறைந்திருப்பதினால் அதை செய்தெடுக்க செலவிடும் சமயம் மிச்சம் ஆகிறது. அவியலும் பொரியலும் கட்டாயம் என்றில்லாமல், பருப்போ, மீனோ, அதையும் விட்டால் இருக்கவே இருக்கிறது தயிரும் ஊறுகாயும் என்று மனம் அமைதலாகிறது.

பரவாயில்லயே, திருந்தி இருக்கிறோம், வாழ்க்கையை அமைதலாக்கி கொன்டிருக்கிறோம் என்று பெருமிதம் தாங்க வில்லை.

வாயெல்லாம் பல்.

அங்கேயும் இங்கேயுமாக வீட்டில் நடை பயில, 'Free-யாக இருந்தால் கொஞ்சம் பேசலாமே', கூப்பிட்டது கூடத்து கண்ணாடி. "Why not?!" என்றது நிஜம்.

ஏய்!
ஏய்!!
பரஸ்பரம் பரிமாரிக்கொன்டார்கள் நிஜமும், நிழலும்.


பேசிக்கொன்டிருக்கையில், நிஜம் கொஞ்சம் நிழலை கூர்ந்து கவணித்தது. 'ஏய். இரு. அப்படியே. ஆடாமல். அசையாமல்', என்று கூவியவாரே கையால் விரைந்து நிழலின் காதோரம் தடவி, 'ஒரு நரை முடி பார்த்தேன் அதான்' என்றது அவசரமாய் அதை 'pull'-லியவாறே.

நிமிர்ந்தால், இன்னொன்று. அதையும் அடுத்து வேறொன்று. அட அட அட.

கொஞ்சம் பதட்டத்துடன் அடுத்த காதையும் திரும்பி காட்டியது நிழல். பார்த்தால், 'ஒன்னு, ரென்டு, மூனு, நாலு.... ஐயோ நிறையவே இருக்கிறதே!', கலங்கி நின்ற நிஜத்திடம் நிழல் சொன்னது, 'உனக்கும் தானே இருக்கிறது', என்று.

என்ன சொல்கிறாய் நீ?!

உனக்கு இருப்பதால் தானே எனக்கும் இருக்கிறது?

இன்னும் குழப்புகிறாய் நீ.

சரி விடு, என்றது நிழல், நிஜத்திடம் பேசி பயனில்லை என்பதால்.

அதை விட்டு வேறு காரியங்கள் பேசிக்கொன்டார்கள் நெடு நேரம் இருவரும். புத்தாடைகளை காட்டி மகிழ்ந்துகொன்டார்கள். தலையில் ஒரு கொண்டை போட முயற்சித்தார்கள். குட்டை முடியால் பயன் இல்லாமல் போகவே, கை விட்டார்கள் முயற்சியை. நீளமாக முடியை வளர்த்தே தீருவது என்று ஆனை இட்டுக்கொன்டார்கள் இருவரும், என்பது கூடுதல் செய்தி.

மொத்தத்தில் இருவரின் உற்சாகம் அவ்வளவாக குறையவில்லையென்றாலும் மனதின் ஓரத்தில் சின்னதாய் ஒரு நெருடல் இல்லாமல் இல்லை - நாளுக்கு நாள் அதிகரிக்கும் நரைகளை பற்றி.


அலுவலகத்தில் அன்று அறுபதுகளில் உள்ள ஒருவர் ஒரு ஊசியில் நூல் கொருத்துக்கொண்டிருந்தார். அலுவலகத்திலா? ஊசியா? நூலா? அதுவும் அமெரிக்காவிலா? என்று அடுத்தடுத்து வரும் கேள்விகளை அறிவேன்.

ஆமா. ஆமா. ஆமாங்க ஆமா. என்பது தான் அதற்கான பதில்.

சரி விஷயத்திற்கு வருகிறேன்.

மதிய நடை முடிந்து நான் மீண்டும் அலுவலகத்திற்குள் நுளையும் போது reception desk-ல் இருந்த Annie ஊசியில் நூல் கொருத்துக்கொண்டிருந்தார்.

"Hi Annie! How are you? It's a beautiful day out!" என்றேன் அழகிய வெயிலின் உற்சாகத்தால்.

"Hi Hephzi! I am frustrated. For the last entire hour I have been struggling with this thing!!!!" என்றார் ஊசியையும் நூலையும் கையில் பிடித்தவாறு. "There's a button gone lose on my shirt and I am trying to fix it. But if only I can get this thread through the needle..." என்றார் பரிதாபமாய்.

அவ்வளவு தானே, இதுக்குப்போய் வருதப்படலாமா என்ற தோரனையில், "Let me try" என்று சாந்தப்படுத்தினேன். சொன்ன கையோடு விரைந்து ஊசியையும் நூலையும் பறித்துக்கொண்டேன் Annie-யிடமிருந்து.

எத்தனை ஊசியையும் நூலையும் பார்த்திருப்போம் - கல்லூரி நாட்களில் teddy bear பொம்மை செய்ய கற்றுக்கொண்டபோது! எத்தனை எத்தனை பொம்மைகள் செய்து குவித்திருக்கிறோம்!! இந்த அமெரிக்க ஊசி என்ன! என்ற ஒரு அலட்சியம் மனதில்.

இதை எதற்காக சொல்ல வருகிறென் என்று கட்டாயம் ஊகித்திருப்பீர்கள் - கெட்டிக்காரர்கள் நீங்கள்! ஒரு நொடி வேலை என்று நினைத்தது 5 நிமிடம் ஆகியும் தொடர்ந்தது. ஊசியின் ஓட்டை தெரிகிறது. நூலின் நுனி தெரிகிறது. ஆனால் இரண்டையும் பக்கத்தில் கொண்டு போகிறபோது ஏதோ ஒன்று 'out of focus' ஆகிவிடுகிறது!! அப்பப்பா வேர்த்து ஊற்றிவிட்டது எனக்கு.

நல்லவேலையாக உடன் இருந்த அலுவலக தோழி விரைந்து என் கையில் இருந்து பறித்து நொடியில் கொருத்து Annie-யின் கைகளில் கொடுத்து விட்டாள். Annie-க்கு பெரிய உபகாரமாய் போயிற்று. எனக்கும் தான். "அவமானப்படுத்தாமல் காப்பாத்தி விட்டாயே தாயி", என்று மனதில் தோழிக்கு நன்றி சொல்லிகொண்டேன்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் கவணித்தேன், out of focus ஆனது Annie-யின் ஊசி மட்டும் இல்லை. சின்ன எழுத்து தமிழ் Bible-ம், shampoo bottle instructions-ம், மற்றும் பல fine prints-ம் என்று.

ம்ஹூம்!!

கண் டாக்டரிடம் ஒரு நடை போய் கண்ணை காட்டி விட்டு வந்தேன். "வேற ஒன்னும் இல்லை வயசாகிறதில்லே, அதான்." என்றார் ரொம்ப அமைதலாய். தலையே சுற்றி விட்டது எனக்கு.

என்ன சொல்கிறீர்கள் டாக்டர்? வயசா? எனக்கா? நாற்பதை தான்டி ரென்டு வருஷம் கூட ஆகலியே முழுசா?! என்றேன். சிரித்துக்கொண்டே சொன்னார்  டாக்டர், "சந்தோஷப்பட்டுக்கொள் இவ்வளவு நாள் கூர்மையான கண்கள் கிடைத்ததற்கு என்று.".

தொடர்ந்து சொன்னார், "I am not saying you need glasses right now. But clearly I see that you have it in your future. May be 5 years from now. But I will give you a prescription just in case you wish to get it now".

Nooooooooo!!!! அலறிக்கொன்டே திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேர்ந்தேன்.

நாற்பது நன்றாகத்தான் இருக்கிறது, முதுமை வந்து நெருக்காத வகையில்...

ஒருவேளை வந்து நெருக்கும்போது ஒதுங்கி நின்று வழிகொடுத்தால் போச்சு!

கவலையை விடுங்க...

என்றும் அன்புடன்,

நாற்பத்தி...  NRIGirl




3 comments: (+add yours?)

bkaseem சொன்னது…

லயித்துப் படித்தேன் இந்தப்பதிவினை!

லயிக்காமல், Like பண்ணாமல் எப்படி இருக்க இயலும்? நானும் இந்த வயதுக்காரன் தானே? அட! உங்களுக்கும் உண்டா இந்த வியப்பு? நான் எனக்கு மட்டும் என்றல்லவா நினைத்திருந்தேன்?

நாற்பதைத் தொட என்னமோ இன்னும் நானூறு ஆண்டுகள் இருப்பதுபோல் ஓர் எண்ணம் மனதில் இருந்ததுண்டு. கட்டிலில் படுக்கும்போது, கட்டிலில் பாதிதான் இருக்கிறோம், இனி வளரவும், கட்டிலின் கால்மாட்டினைத் தொடவும் ஆகும் காலம் கண்காணாத் தொலைவில் இருப்பதாக நினைத்துக்கொள்வது இப்போதும் நினைவில் உள்ளது.

நடுவில் என்ன ஆயிற்று என்பதுதான் தெரியவில்லை. திடீரென்று நாற்பது ஆயிற்று. ஆரம்பத்தில் மறுப்பதும், மறைப்பதும், முப்பத்தி என்று ஒரு எண்ணை வயதாகச் சொல்வதுமாக இருந்தாலும்… இந்த நரை வில்லனாயிற்று. ஏதோ ஒவ்வொரு முறையும் வயதைக்குறைத்து சொல்லும்போதும் ஒரு கொத்து முடி நரைப்பதாய் ஓர் உணர்வு. ஆகவே, நாற்பத்தி… என்று உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டியதாயிற்று.

ஆச்சரியம் என்னவென்றால், கடந்த மூன்று நாட்களாய் நானும் நினைத்தேன்… கண் டாக்டரை பார்க்கவேண்டும் என்று. சின்ன எழுத்துக்கள் உள்ள தாள் என்றால், கையை இன்னும் கொஞ்சம் இறக்கி, ஏதோ அதிலிருந்து துர்நாற்றம் வருவதுபோல, தலையைக் கொஞ்சம் பின்னுக்கு இழுத்து வைத்தால்தான் எழுத்து தெளிவாகிறது. ஆடித்தான் போனேன்… டாக்டரிடம் போக இன்னும் தைரியம் வரவில்லை.

நான் பாட்டுக்கு என் கதையை அடுக்கிக்கொண்டே போகிறேன். உங்களது ஒவ்வொரு பதிவும் உள்ளத்தை தட்டி, நினைவுகளை எழுப்பி விடுகிறது.

“கடிதமாவது, கட்டுரையாவது, யார் வாசிக்கிறார்கள், யார் பதில் எழுதுகிறார்கள் என்ற அங்கலாய்ப்பினால் தானோ என்னவோ கொஞ்சம் உங்களோடு பகிர்வதிலும் வேகம் குறைந்திருக்கிறது” – என்று எழுதியிருந்தீர்கள். பதில் எழுதாமல் இருக்கலாம் ஆனால் அனைவரும் கண்டிப்பாக படிக்கிறார்கள். அடுத்த பதிவினை எதிர்பார்க்கிறார்கள். ஆதலால், வேகத்தைக் குறைக்காதீர்கள் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்… வண்டு !

NRIGirl சொன்னது…

என் ஒவ்வொரு பதிவையும் உடனுக்குடன் படிப்பது மட்டுமில்லாமல் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் விதத்தில் அருமையான கருத்துரை எழுதி உற்சாகமூட்டும் வண்டு வாழ்க!

ஐம்பத்தி, அறுபத்தி, தொண்ணூத்தி, நூத்தி, என்ற பதிவுகளின் நாட்கள் வரை நம் நட்பும் வாழ்க!

KParthasarathi சொன்னது…

யதார்தத்தை சிரிப்பும் கேலியும் கலந்து அழகாக எழுதி இருக்கீங்க!
படிக்க சுவையாக இருந்தது..உண்மை என்ன வென்றால் நமக்கு தெரியாதவண்ணம் காலம் நம்மை பின்னே துரத்தி கொண்டு இருக்கிறது